Tamil_Typist engagement report
@tamil_typist - 274K followers on X
Measured over 10 original posts from a 30-day window, last computed on September 7, 2026.
Engagement
A typical post picks up 80 interactions against 274K followers, an engagement rate of 0.029%. Measured over 10 original posts, its engagement rate beats 40% of 6,874 tracked accounts of a similar size, which puts it in the middle of its size range rather than at either end. Posts are seen about 6.6K times each, and 1.20% of those impressions turn into an interaction. That is about 2.42% of the follower count, which is the gap between an audience on paper and an audience in a timeline. Posting runs at about 1.4 post a day over the last 30 days, though only 17% of days saw any activity at all. Most posts go out around 05:00 UTC, and Monday is the busiest day of the week. Of the 10 posts sampled, 10% carry an image or video and 10% link out. The account's strongest tracked post pulled 640 interactions, about 8.0x its own typical post. Recurring topics include #bihar, #chanakyaa, #india.
Measured over 10 original posts from a 30-day window, last computed on September 7, 2026. Recurring tags: #bihar, #chanakyaa, #india.
Compared with accounts its own size
Tamil_Typist's engagement rate beats 40% of the tracked X accounts closest to it in follower count (6,874 accounts, accounts of similar size (decile 7 of 10)). A percentile is spread evenly by construction, so 50 really is the middle of that group and 90 really is its top tenth.
On engagement per impression rather than per follower it beats 52% of the same group. When those two numbers disagree, the gap is about how far its posts travel rather than how people react to them.
Where this sits in the catalog
At 0.029%, Tamil_Typist sits above the 25th percentile of the 66,258 accounts in this comparison. That places it in the below the median band, which runs 0.016% to 0.1%.
Show the percentile table
| Percentile | Engagement rate |
|---|---|
| 10th percentile | 0.002% |
| 25th percentile | 0.016% |
| 50th percentile | 0.1% |
| 75th percentile | 0.499% |
| 90th percentile | 2.09% |
| 99th percentile | 119.6% |
This ruler is the whole measured catalog, not a size-matched group: it shows where the raw rate falls across every account we can measure, all of which are large. For a like-for-like comparison, read the size-band percentile above instead. See how the bands are built
Posting timing
This account posts most often around 05:00 UTC, and Monday is its busiest day of the week. The bars below are the catalog-wide pattern, with this account's own busiest slot marked. They do not show how this account performs at each hour: we keep one aggregate per account, not one per hour, so that measurement does not exist in our data.
Show engagement by hour posted, utc as a table
| Hour (UTC) | Vs author median | Posts |
|---|---|---|
| 00:00 UTC | -1% | 89K |
| 01:00 UTC | -2% | 90K |
| 02:00 UTC | -3% | 88K |
| 03:00 UTC | -4% | 94K |
| 04:00 UTC | -5% | 76K |
| 05:00 UTC | -4% | 75K |
| 06:00 UTC | -5% | 86K |
| 07:00 UTC | -5% | 93K |
| 08:00 UTC | -4% | 108K |
| 09:00 UTC | -4% | 124K |
| 10:00 UTC | -3% | 129K |
| 11:00 UTC | -3% | 141K |
| 12:00 UTC | -3% | 154K |
| 13:00 UTC | -3% | 167K |
| 14:00 UTC | -4% | 173K |
| 15:00 UTC | -2% | 176K |
| 16:00 UTC | -3% | 171K |
| 17:00 UTC | -3% | 159K |
| 18:00 UTC | -2% | 149K |
| 19:00 UTC | -2% | 141K |
| 20:00 UTC | -1% | 131K |
| 21:00 UTC | 0% | 116K |
| 22:00 UTC | -2% | 100K |
| 23:00 UTC | -1% | 90K |
Show engagement by day of week as a table
| Day | Vs author median | Posts |
|---|---|---|
| Sunday | +5% | 393K |
| Monday | +1% | 483K |
| Tuesday | -2% | 520K |
| Wednesday | -3% | 472K |
| Thursday | -2% | 430K |
| Friday | -3% | 447K |
| Saturday | +2% | 393K |
Formats this account uses
Its own posting mix on the left, and what each of those formats does across every account we track on the right. Only formats where the effect clears our publish test appear here, so an empty row is a format we could not measure rather than one that does nothing.
| Format | This account | Catalog effect | 95% interval | Accounts behind it |
|---|---|---|---|---|
| Image or video | 10% of posts | +111% | +108% to +115% | 34K |
| Outbound link | 10% of posts | -41% | -42% to -40% | 32K |
| Typical length | - | +15% | +14% to +16% | 32K |
- 10% of this account's sampled posts carry an image or video. Across the catalog, posts with an image or video run 111% above the same accounts' other posts.
- 10% of its posts carry a link off X. Across the catalog, posts with an outbound link run 41% below the same accounts' other posts.
- Its average post runs 2984 characters, which falls in the over 280 characters band. Across the catalog, posts over 280 characters run 15% above the same accounts' other posts.
These are catalog-wide differences applied to this account's own posting mix, not a measurement of how each format performs for this account specifically. We keep one median per account, not one per format per account, so the second thing is not something this data can tell you.
Best tweets
- Sep 4, 20268.0x their median
அட கர்மம் பிடிச்ச நாய்ங்களா.. இதுக்கு ஏண்டா வெள்ளையும் சொள்ளையுமா சுத்தனும்?? https://t.co/w5PmO88IzJ
- Sep 3, 20266.5x their median
இரண்டு மாதத்தில் வீடு தலைகீழ் சொந்தக்காரருக்கு ஒரே பையன். பையன் காக்கிச்சட்டை கமல் மாதிரி இருப்பான். படு செல்லமும் கூட படித்து முடித்தபின், சொந்தத் தொழில் தான் செய்வேன் என்று Water Purifer Business. வாழ்க்கை குடிப்பழக்கம் ஆரம்பிக்கும் வரை நன்றாக இருந்தது. நண்பர்களுடன் சேர்ந்து மொடாக் குடியன் ஆகிவிட்டான். இதனிடையே காதல். வீட்டில் அப்பா ஒன்றும் சொல்லவில்லை. அம்மாவிற்குப் பிடிக்கவேயில்லை. ஜாதி வேறு இடையில். பெண் வீட்டில் அவர்கள் அண்ணன்கள் படு எதிர்ப்பு. அதை மீறிக் கல்யாணம். பையன் கீழே மனைவியுடன். பெற்றோர் மாடியில். தனி வீடு. தனிச் சமையல். கல்யாணம் ஆன இருபதாவது நாள், வேலூருக்கு பைக்கில் போய் திரும்பும் போது, செமையாகக் குடித்துவிட்டு, லாரி மீது வண்டியை விட்டு, Spotல் out. அப்பா-அம்மா போய் bodyஐ வாங்கி, formalities முடித்து, எரித்து விட்டு, வீட்டுக்கு வந்தால், கீழ் வீடு காலி. பெண்ணின் அண்ணன்கள் வந்து, வீட்டை காலி பண்ணியதோடு, பெண்ணையும் கூட்டிக் கொண்டு போய்விட்டார்கள். மாடியில் இவர்கள் இருந்ததால், இவர்களின் பொருட்கள் தப்பின பெண்ணுக்கு அடுத்த 30வது நாளில் ஒரு Militaryல் வேலை பார்க்கும் பையனைப் பார்த்து அவர்கள் கட்டி வைத்து விட்டனர். அவளும் டெல்லி போய்விட்டாள். பெற்றோர் பாடு திண்டாட்டம். பையனின் அம்மா ‘’அந்த பொண்ணு எங்கியாவது நல்லா இருந்தாச் சரி’’ என்று மட்டும் சொன்னார். பையனை நினைத்து படு வருத்தம். சரியாக வளர்க்கவில்லை என்று ரொம்ப வருத்தப்பட்டார்கள். இப்போது வீட்டை விற்று விட்டார்கள். பெற்றோர் இருவரும் காசிக்குப் போய் அங்கு மடத்தில் இருக்கிறார்கள். திரும்ப வருவார்களா என்பது தெரியாது என்று அந்த அம்மாவின் அண்ணன் சொன்னார். கேட்கவே படு வருத்தமாக இருந்தது. Life is totally unpredictable/ 2 மாதத்திற்குள் ஒரு வீடு தலைகீழாக மாறும் என்பதை யாரும் நினைத்துப் பார்க்க முடியாது எல்லாவற்றிற்கும் பிண்ணணியில் ‘’குடி மட்டுமே’’
- Sep 4, 20262.8x their median
அமெரிக்க கம்பெனி வேலையை உதறிவிட்டு முருங்கை விவசாயம் - ரூ.30 லட்சம் சம்பாதிக்கும் எஞ்சினியர்! https://t.co/GRjF2NAc5Y
- Sep 5, 2026
கடவுள் என் பக்கம்! 😄 சமீபகாலமாகக் கடவுள் என் பக்கம்தான் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அதுவும் சாதாரணமாக இல்லை... Overtime போட்டுக்கொண்டு என் பக்கத்தில் நிற்கிறார் போல! கொஞ்ச நாட்கள் முன்பு பில்டிங்கிற்குப் பெயர் எழுதுவதற்காக ஒரு பேர்வழியைக் கூப்பிட்டேன். மனுஷன் ஏணியில் ஏறினார். நான் கீழே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு பத்து செகண்ட் கூட ஆகியிருக்காது... சடாரென்று சரிந்து விழுந்தார்! குடித்திருந்தாரா, தலை சுற்றியதா, உடம்பு உண்மையிலேயே சரியில்லையா என்று இன்று வரை தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நான் அங்கே இல்லாத நேரத்தில் அவர் விழுந்திருந்தால், கீழே இருந்த கூர்மையான கம்பிகளின் மேல்தான் நேராக விழுந்திருப்பார். அன்றைக்கு கடவுள், “இவனுக்கு இன்றைக்கு Police, Ambulance எல்லாம் வேண்டாம்... ஏற்கனவே போதுமான வேலை இருக்கு!” என்று நினைத்திருக்க வேண்டும். God was in my favour! அந்தச் சம்பவத்திலிருந்து மீண்டு, “இனி கொஞ்ச நாளைக்கு நிம்மதியாக இருக்கலாம்” என்று நினைத்தேன். கடவுள் மேலே இருந்து சிரித்திருக்க வேண்டும். “அவ்வளவு சீக்கிரமா?” இன்று காலை அடுத்த எபிசோடு ஆரம்பம்! கீழே இருக்கும் Main Electricity Board-ல் ஏதோ பிரச்சனை. பில்டிங்கில் இருக்கும் நான்கு வீடுகளிலும் கரண்ட் காலி. எலக்டிரிஷியனைக் கூப்பிட்டேன். போன ஜென்மத்தில் நான் ஏதோ பெரிய புண்ணியம் செய்திருக்க வேண்டும். உடனே வந்துவிட்டார்! இன்றைய காலத்தில் Electrician, Plumber போன்றவர்களை Phone செய்தவுடன் வரவழைப்பதே ஒரு தனி சித்தி. வந்தவர் Main Board-ஐத் திறந்து பார்த்தார். 3 Phases 1 Phaseல் Fuse Carrier கருப்பு. அதைத் தாங்கி நிற்கும் Base அதைவிடக் கருப்பு. உதிரக்கூடிய நிலையில், அதனுடன் connect ஆகியிருந்த wire சுமார் நான்கு inch வரை கருகியிருந்தது. நான் பார்த்தவுடன், “கரண்ட் வராதது கூட பரவாயில்லை... பெரிய லெவல் பிரச்சனை வரவில்லையே’’ என்ற மனநிலைக்கு வந்துவிட்டேன். எலக்டிரிஷியன் பார்த்துவிட்டு, “முழு செட்டையும் மாத்தணும் சார்.” என்றார். சரி என்றேன். முதலில் Fuse Carrier-ஐ எடுத்தார். பிறகு அது connect ஆகியிருந்த Base-ஐ எடுக்க ஆரம்பித்தார். அடுத்த நொடி... படார்!!! சரவெடி! நான் இரண்டு அடி பின்னால். அவர் மட்டும் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார். LIVE WIRE! “புதுசு வாங்கிட்டு வந்து நானே மாட்டிக் கொடுத்துடறேன் சார்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார். எனக்கு மட்டும், “EB-க்குப் போய் அவர்கள் காலில் விழுந்துவிடலாமா?” என்று தோன்ற ஆரம்பித்தது. எதிர் வீட்டுக்காரரிடம் சொன்னேன். அவர் மிக அமைதியாக, “அவர் திறமையான Electrician தானே... பார்ப்போம்.” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ‘பார்ப்போம்’ என்று சொல்லிவிட்டு அவர் போய்விட்டார். ‘பார்க்க’ நான் மட்டும் அங்கே நின்றுகொண்டிருந்தேன்! பத்து நிமிடத்தில் Electrician புது செட்டுடன் திரும்பி வந்தார். வந்தவுடன் என்னிடம், “நீங்க கொஞ்சம் தள்ளி நில்லுங்க சார். நான் வேலை பார்க்கும்போது பக்கத்துல வரக்கூடாது. Live wire-ஓட விளையாடப் போறேன்!” என்றார். அவர் அதைச் சொன்ன விதம், ஏதோ குழந்தைகளுடன் Ludo விளையாடப் போவது மாதிரி இருந்தது. நான் மெதுவாக, “Gloves போட்டுக்கலாமே?” என்றேன். மனுஷன் என்னைப் பார்த்து பெருமையாக, “நானெல்லாம் 30 வருஷமா Gloves இல்லாமத்தான் வேலை பார்த்துட்டிருக்கேன் சார்!” என்றார். எனக்கு உடனே தோன்றியது: “அதுதான் சார் எனக்குப் பயமே!” ஆனால் வாயால் சொல்லவில்லை. எனக்கு லேசாகக் கிலி பிடித்தது. உடனே கீழ் வீட்டில் சாய்த்து வைத்திருந்த நல்ல தடிமனான Walking Stick என் கண்ணில் பட்டது. (உயர்ந்த மனிதனில், சிவாஜி அந்த நாள் ஞாபகம் பாட்டுக்கு உபயோகப்படுத்துவது போல் நல்ல ஸ்டைலுடன்) அதை எடுத்து கையில் தயாராக வைத்துக்கொண்டேன். Electrician கேட்டால் என்ன சொல்வது? “உங்களை அடிக்க இல்லை சார்... காப்பாற்ற!” அவர் ஏதாவது இசகு பிசகாக Live Wire-ல் மாட்டிக்கொண்டால், கையால் தொட முடியாதே! Walking Stick-ஆல் அவர் கையில் ஒரு போடு போட்டு Wire-லிருந்து பிரித்துவிடலாம் என்பது என் Emergency Plan. மனுஷன் அங்கே Electrical Engineering செய்து கொண்டிருந்தார். நான் இங்கே Disaster Management Department நடத்திக்கொண்டிருந்தேன். முதலில் கரண்ட் வந்து கொண்டிருந்த Wire-ஐ Insulation Tape வைத்து கன்னாபின்னாவென்று சுற்றினார். பிறகு புதிய Base-ஐ மாட்ட ஆரம்பித்தார். அதை மாட்ட வேண்டுமானால், பின்புறம் உள்ள பிளேட்டில் இரண்டு நட்டுக்களை பின்புறமிருந்து கொடுக்க வேண்டும். கையால் செய்யமுடியாது. இடமேயில்லை. இவர் கட்டிங் பிளேயரை எடுத்து நட்டை அதில் பிடித்து, பின்புறம் ஒரு மாதிரி வைத்து அந்தப் பக்கம் கொடுத்து தட்ட மீண்டும்... படார்!!! இன்னொரு சரவெடி! அவருக்கு ஒன்றுமில்லை. எனக்குத்தான் BP இரண்டு point ஏறியிருக்கும். என் மனதுக்குள் அடுத்தடுத்து... Ambulance... Police Station...எல்லாம் slideshow மாதிரி வந்து போயின. ஆனால் Electrician? மனுஷன் அசரவே இல்லை! ஒரு டம்ளர் தண்ணீரைக் குடித்தார். எழுந்து நின்றார். வானத்தை ஒரு முறை பார்த்தார். பின் Cutting Plier எடுத்தார். Screw Driver எடுத்தார். Spanner எடுத்தார். அவரிடம் இருந்த இன்னும் என்னென்ன உபகரணங்களோ எல்லாவற்றையும் வைத்து Base-ஐ இறுக்கினார். நான் மட்டும் Walking Stick-ஐ இறுக்கமாகப் பிடித்துக்கொண்டு நின்றேன். கடைசியாக Fuse Carrier-ஐயும் மாட்டினார். கையால் அதை அழுத்தி உள்ளே தள்ளினார். வொயர்களை அரேஞ்ச் பண்ணி, டேப் கொண்டு சுற்றி ஒழுங்குபடுத்தினார். வேலை கச்சிதமாக முடிந்தது என்று பார்த்தவுடனேயே தெரிந்தது ஒரு நொடி... இரண்டு நொடி... கரண்ட் வந்தது! நான்கு வீடுகளிலும் Fan சுற்ற ஆரம்பித்தது. Light எரிந்தது. ஆனால் உண்மையைச் சொன்னால்... போன கரண்ட் வந்ததோ இல்லையோ, எனக்குத்தான் முதலில் உயிர் திரும்பி வந்தது! Electrician தனது Tools-ஐ எடுத்துக்கொண்டு மிகவும் சாதாரணமாகக் கிளம்பினார். அவருக்கு இது இன்னொரு Working Day. எனக்கு மட்டும் இது... Final Destination – Chennai Chapter! இதிலிருந்து நான் கற்றுக்கொண்ட பாடம் ஒன்றுதான். Fuseஐ மாற்றுவதென்றால், எலக்டிரீஷியன் ஓகே. ஆனா, Main Board, Live Wire, Fuse Carrier Base என்றெல்லாம் வந்தால்... Electrician திறமையானவரா, 30 வருட Experience இருக்கிறதா என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய மாட்டேன். டைரக்டாக EB-யின் காலில்தான் விழுவேன்! ஒரு நாள் முழுக்க கரண்ட் இல்லாமல் காத்திருக்க வேண்டியிருந்தாலும் பரவாயில்லை. Fan இல்லாமல் ஒரு நாள் வியர்க்கலாம். ஆனால் Walking Stick-ஐ கையில் வைத்துக்கொண்டு, “எப்ப இவரை அடிச்சுக் காப்பாத்த வேண்டி வருமோ?” என்று Live Wire பக்கத்தில் நின்று கொண்டிருப்பதைவிட... வியர்வையே மேல்! ஆக மொத்தத்தில், கடந்த சில நாட்களில் எனக்கு ஒன்று மட்டும் தெளிவாகிவிட்டது: கடவுள் என் பக்கம்தான் இருக்கிறார். ஆனால் இப்படி அப்பப்ப ஏதாவது ஒரு எபிஸோடு கொடுத்து, நான் உன் சைடுதான்னு, அவர் PROVE பண்ணிட்டிருக்கக் கூடாது
- Sep 6, 2026
Facebook-ல் ஒரு அறிவுஜீவியின் புலம்பல்! ஒருத்தர் ரொம்ப மெனக்கெட்டு, “Quantum Physics பற்றி எளிமையாக...” என்று தமிழில் ஒரு பதிவு போட்டாராம். ஒரு Like. Comment — பூஜ்ஜியம்! அதே நேரத்தில் ஒரு பெண், “நீங்கள் காப்பிப் பிரியரா? டீ பிரியரா? எனக்கு காப்பிதான்...” என்று போட்டிருக்கிறார். அவ்வளவுதான்! 267 Likes! 124 Replies!! எனக்கு Boost!” “காலையில Coffee... Evening Tea...” என்று ஒரு சர்வதேச கருத்தரங்கே நடந்திருக்கிறது! இன்னொருத்தர், “ஒரு கார் மணிக்கு 160 கி.மீ. போனால், 15 நிமிடத்தில் எத்தனை கி.மீ. போகும்?” என்று கேட்டிருக்கிறார். அதற்கு 140 பேர் Reply! ஒருத்தர் 40 கி.மீ. என்கிறார். இன்னொருத்தர், “Traffic இருந்தா எப்படி 40 கி.மீ. போகும்?” என்று practical-ஆ யோசிக்கிறார். வேறொருத்தர், “எந்த கார்? Petrol-ஆ, Diesel-ஆ?” என்று கேள்விக்கே ஜாதகம் பார்த்திருக்கிறார்! இதையெல்லாம் பார்த்த Quantum Physics பதிவர் மட்டும் ஒரு மூலையில்... அணுவுக்குள்ள என்ன நடக்குதுன்னு சொல்ல வந்தேன்டா...” என்று புலம்பல் Facebook மக்கள்: “அணுவுக்குள்ள என்ன நடந்தா எங்களுக்கென்னப்பா? காப்பியா டீயான்னு கேளு...உடனே பதில் சொல்றோம்!” இதில் உச்சக்கட்ட சோகம் என்னவென்றால்... இந்தப் புலம்பல் பதிவைக்கூட என்னைத் தவிர வேறு யாரும் பார்த்திருக்க வாய்ப்பில்லை! நான் Facebook open பண்ணிய நேரத்துக்கு அது எதிரே வந்து விழுந்ததால் படித்துவிட்டேன். அந்த மனுஷன் Quantum Physics எழுதினதற்கே ஒரு Like... Quantum Physics-க்கு Like வரலைன்னு புலம்பினதற்கும் Like வரலை! மயில்சாமி–வடிவேலு பாணியில் .. “நாங்க ஏண்டா நடுராத்திரியில சுடுகாட்டுக்குப் போகணும்?” என்பது Facebook மக்களின் கேள்வி: “நாங்க ஏண்டா Facebook-க்கு வந்து Quantum Physics படிக்கணும்?” “காப்பியா... டீயா...?” அதைக் கேளு! Quantum வேகத்துல Reply வருதா இல்லையான்னு மட்டும் பாரு!
- Sep 4, 2026
தெனாவெட்டு என்றால் என்ன? அர்த்தத்தை Dictionaryல் எல்லாம் தேட வேண்டாம். என்னுடைய நண்பர் ஒருவரின் இந்தக் கதையைப் படித்தால் போதும்! என்னுடைய நண்பர் ஒருவர், “WhatsApp-ஐ விட Instagram-லதான் நான் அதிக நேரம் இருப்பேன்” என்று பெருமையாகச் சொல்வார். அப்படி ஒருநாள் Instagram-ஐ மேய்ந்து கொண்டிருந்தபோது, ஒரு Advertisement வந்திருக்கிறது. BANK EMBLEM - Pensioners Debit Card - “இந்த வசதி தரப்படும்... அந்த வசதி தரப்படும்...” அதற்கெல்லாம் மேலாக, “₹50,000 அல்லது உங்களுடைய Pension Amount வரை Overdraft வசதி!” என்று ஆசையைத் தூண்டும் அறிவிப்பு. நம்ம ஆளுக்கு உடனே ஒரு சந்தோஷம்! “அடடா... நம்ம Pensioners-க்காகவே Bank என்னமா யோசிக்கிறாங்க!” Advertisement-ல் இருந்த link-ஐ click செய்திருக்கிறார். அடுத்ததாக ஒரு Video Call! அந்தப் பக்கம் ஆள் முகம் தெரியவில்லை. Bank Emblem மட்டும் தெரிகிறது. ஆனால் கேள்விகள் மட்டும் Interview Board மாதிரி வருகின்றன. 1. உங்களுக்கு இந்த Card ஏன் தேவை? 2. உங்களுடைய Pension Amount எவ்வளவு? 3. புதிய Debit Card கொடுக்கிறோம். அதற்கு முன் உங்களுடைய பழைய Debit Card details-ஐ நாங்கள் கொடுக்கும் link-ல் பதிவு செய்ய வேண்டும். புதிய Card-ஐ நீங்கள் பயன்படுத்த ஆரம்பித்ததும் பழைய Card-ஐ deactivate செய்ய அது தேவைப்படும். (இதைக் கேட்டவுடன் சாதாரண மனிதனுக்கு ஒரு சந்தேகம் வரும்: “என்னுடைய Debit Card-ஐ கொடுத்த Bank-க்கே என்னுடைய Debit Card details தெரியாதா?” – ஆனா நம்மோட ஆளுக்கு அந்த நேரத்தில் Overdraft தரப்போறான் என்பது மட்டுமே மனதில் – மூளை under maintenance) 4. புதிய Card மூலம் Train Ticket book செய்தால் Discount கிடைக்கும். இன்னும் என்னென்னவோ Benefits! இவரும், “ஆஹா... நம்மளையே Select பண்ணிட்டாங்களே!” என்ற பரவசத்தில், அவர்கள் கொடுத்த Link-க்குள் போய்... பெயர், விவரம், Card details என்று கேட்டதையெல்லாம் கொடுத்து, கிட்டத்தட்ட தன்னுடைய சரித்திரத்தையே எழுதி முடித்துவிட்டார்! “இன்னும் ஏதாவது வேண்டுமா? Birth Certificate மட்டும் பையன் வீட்டில் இருக்கு... நாளைக்கு அனுப்பட்டுமா?” என்று கேட்காதது மட்டும்தான் பாக்கி! ஒரே ஒரு சின்ன கேள்வி மட்டும் அவருடைய மனதில் வரவில்லை: “நான் ஏற்கனவே இந்த Bankல 35 வருஷம் குப்பை கொட்டிருக்கேன், Bank-ன் customer வேற இப்ப? Bank-கிட்ட என்னுடைய details இருக்காதா?” என்னுடைய Employee Number மட்டும் வாங்கினால் போதாதா?’’ அந்தச் சிறிய சந்தேகம் மட்டும் வந்திருந்தால் இந்தக் கதையே பிறந்திருக்காது! எல்லா விவரங்களையும் கொடுத்து முடித்த அடுத்த நொடி... Phone compromised. They can also operate என்ற நிலை. ஆனால் அது இவருக்குத் தெரியவில்லை. Fortunately, Account-ல் இருந்தது வெறும் ₹300 மட்டுமே. பெரிய தொகை Deposits இருந்தாலும் அவை Bank-க்கு நேரில் சென்று செய்யப்பட்டவை. Online-ல் செய்யப்படாததால் அவற்றை Mobile Banking மூலம் உடனடியாக close செய்ய முடியாது. அன்று சாயங்காலம் என்னைக் கூப்பிட்டார். மிகவும் சாதாரணமாக, “நீ ஏன் இதற்கு Apply பண்ணவில்லை?” என்று கேட்டார். எனக்கு ஒரு நிமிடம் ஒன்றுமே புரியவில்லை. விஷயத்தைக் கேட்டதும் எனக்கு ஷாக்! நான் சொன்னேன்: “இது Fake Site! நீ உன்னுடைய முக்கியமான details எல்லாத்தையும் compromise பண்ணிட்டே. உடனே Phone-ஐ format பண்ணு.” அதற்கு வந்த பதில்: “Account-ல ₹300 தான் இருக்கு. ஒண்ணும் ஆகாது!” இருந்தாலும் மறுநாள் அருகிலிருந்த Bank Branch-க்குச் சென்று Debit Card-ஐ block செய்துவிட்டு, Instant Debit Card ஒன்றையும் வாங்கிவிட்டார். நானும், “Mobile Banking Password-ஐயும் உடனே மாற்று!” என்றேன். அதையும் மாற்றிவிட்டார். சரி, இப்போதாவது நான் சொன்னபடி Phone-ஐ format செய்திருப்பார் என்று நினைத்தேன். இரண்டு நாட்கள் கழித்து Phone செய்தேன். “Format பண்ணியாச்சா?” என்று கேட்டேன். அதற்கு நம்ம ஆள் மிகவும் நிதானமாக, “Format பண்ணணும்னா Contacts பிரச்சனை இருக்கு. அதனால்தான் இன்னும் பண்ணலை...” என்றார். நான் கொஞ்சம் கோபமாகவே சொன்னேன்: “Contacts-ஐ Google-ல் save பண்ணிட்டு உடனே Phone-ஐ format பண்ணு!” அதோடு விடவில்லை. “Financial angle மட்டும் பார்க்காதே. உன்னுடைய WhatsApp access கிடைத்தால், உன் பெயரில் உன் நண்பர்களிடம் பணம் கேட்கலாம். Social Media-வில் ஏதாவது ஏடாகூடமாக post செய்யலாம். உன்னுடைய personal data-வையும் misuse செய்யலாம்.” என்று சொல்லிவிட்டு Phone-ஐ வைத்தேன். அவ்வளவு சொல்லியும்... மனுஷன் Phone-ஐ format பண்ணவில்லை! ஏனென்றால்... ₹300 தானே இருக்கு! வந்தது Pension Day! THE D DAY. Account-க்கு Pension credit ஆனது. “Pension Credited” என்று SMS வந்திருக்கிறது. அதே நேரத்தில், நம்ம நண்பரை விட அந்த Fraudster-க்கும் Pension Day மீது அதிக அக்கறை இருந்திருக்கிறது போல! Mobile Banking-ல் login செய்ய முயன்றிருக்கிறான். ஆனால் நம்ம ஆள் Password-ஐ ஏற்கனவே மாற்றிவிட்டார். Fraudster: “அடடா... Password மாத்திட்டானே!” என்று நினைத்திருப்பான் போல. அடுத்த முயற்சி... அவனிடம் ஏற்கனவே இருந்த Debit Card details-ஐ பயன்படுத்தி Mobile Banking Password Reset செய்ய முயற்சி! அப்போதுதான் Bank-லிருந்து இவருடைய Phone-க்கு SMS வருகிறது. “You are giving wrong credentials.” அந்த ஒரு SMS... நான் இரண்டு நாட்களாகச் சொல்லியும் செய்ய முடியாத காரியத்தை... இரண்டு விநாடிகளில் செய்துவிட்டது! இப்போதுதான்... பல நாட்களாக நான் சொன்ன விஷயம் இவருடைய மூளைக்குள் முழுமையாகச் சென்றிருக்கிறது! உடனே Phone-ஐ OFF! அடுத்த Phone Call எனக்கு வேறு ஃபோனில் இருந்து. இந்த முறை குரலில் பழைய தெனாவெட்டு இல்லை. “நீ சொன்ன மாதிரி அன்னிக்கே format பண்ணியிருக்கணும்... இப்ப அவன் try பண்றான்!” என்று புலம்பல். நான் மனதிற்குள் நினைத்தேன்: “₹300 இருந்தப்போ Fraudster நல்லவன்... Pension வந்ததும் Fraudster கெட்டவனா?” ஒரு அரை மணி நேரம் கழித்து SIM Card-ஐ எடுத்துவிட்டு, Phone-ஐ முழுமையாக format செய்தார். ஆனால் அவசரத்தில்... Backup எடுக்காமல் இருந்ததால், சில முக்கியமான Photos-ம் சேர்ந்து... போயே போச்சு! எல்லாம் முடிந்த பிறகு நான் மிகவும் நிதானமாக அவரிடம் கேட்டேன்: “இது தேவையா?” சில விநாடிகள் அமைதி. பிறகு அவர் சொன்ன பதில்: “மடத்தனம்னு தெரிஞ்சே தப்புப் பண்ணினேன்... என்னுடைய தெனாவெட்டுக்கு இது தேவைதான்!” (டைட்டில் வந்துடுச்சு) 😂😂😂
- Sep 6, 2026
சன் டிவியின் ‘தெய்வ தரிசனம்’ – ஒரு தரிசன அனுபவம்! நேற்று சாயங்காலம் பால் வாங்கப் போனேன். பால்காரர் — அதாவது இப்போதெல்லாம் Milk Vendor-cum-Spiritual Fund Managerனு அவரைச் சொல்லணும் — பால் பாக்கெட்டோடு சேர்த்து ஒரு டொனேஷன் புத்தகத்தையும் நீட்டினார். “எங்க ஏரியாவுல புதுசா ஒரு கோவில் கட்டறோம் சார்...” பால் வாங்கப் போன இடத்தில் புண்ணியம் வாங்கும் வாய்ப்பும் கிடைத்ததால், நானும் ஏதோ கொடுத்துவிட்டேன். ஆனால் பணத்தைக் கொடுத்த கையோடு மனசுக்குள் ஒரு கேள்வி: “ஏற்கெனவே இருக்கிற கோவில்களெல்லாம் போதாதா?” அந்தக் கேள்வியை மட்டும் அடக்க முடியவில்லை. இன்று காலை — 6.9.2026 — 7 மணிக்கு சன் டிவியில் ‘தெய்வ தரிசனம்’ நிகழ்ச்சி. அதில் அத்தாளநல்லூர் அருள்மிகு கஜேந்திர வரதர் திருக்கோவில் பற்றிய நிகழ்ச்சி வந்தது. அத்தாளநல்லூர், அம்பாசமுத்திரம் பக்கத்தில் வீரவநல்லூரை அடுத்து இருக்கிறது. அந்தக் கோவிலைப் பார்த்ததும் எனக்கு ஒரு பழைய சம்பவம் ஞாபகத்துக்கு வந்தது. நானும் என்னுடைய அண்ணன் பேரனும் ஒரு நாள் சாயங்காலம் ஸ்கூட்டியில் அந்தக் கோவிலுக்குப் போயிருந்தோம். சாயங்காலம் நேரம் சுமார் ஆறு மணி. கோவிலுக்கு எதிரில் ஒரு சின்ன மண்டபம். அந்த மண்டபத்தில் கோவில் பட்டாசாரியார் தனியாக உட்கார்ந்திருந்தார். “ஏன் இங்கே உட்கார்ந்திருக்கீங்க?” என்று கேட்டேன். அவர் மிகவும் இயல்பாக, “இங்க இருந்தா கொஞ்சம் ரோட்டைப் பார்க்கலாம்...” என்றார். அப்போதுதான் புரிந்தது. அவரும் எவ்வளவு நேரம்தான் கோவிலுக்குள்ளேயே உட்கார்ந்திருப்பார்? இன்னும் கொஞ்ச நாள் அங்கேயே இருந்தால், “பெருமாளே... இன்னைக்கு என்ன விசேஷம்?” என்று இவர் கேட்க, “ஒண்ணுமில்லையே... நீயாவது ஏதாவது பேசுப்பா!” என்று சாமியே பதில் சொல்ல ஆரம்பித்துவிடும் அளவுக்கு அமைதி! கோவிலுக்குள் எங்களைத் தவிர வேறு யாருமே இல்லை. பெருமாள் இருந்தார். பட்டாசாரியார் இருந்தார். நாங்கள் இரண்டு பேர் இருந்தோம். மொத்த Attendance – நாலு! அதிலும் பெருமாளை Staff-ல் சேர்ப்பதா, Management-ல் சேர்ப்பதா என்று தெரியவில்லை! கோவிலுக்கு எதிரில் முன்பொரு காலத்தில் அழகான அக்ரஹாரம் ஒன்று இருந்திருக்க வேண்டும். இப்போது? இருபுறமும் வீடுகள் இருக்கின்றன. ஆனால் பெரும்பாலானவை இடிந்து, சிதிலமடைந்து, “நாங்களும் ஒரு காலத்தில் வீடுகள்தான்” என்று வரலாற்றுச் சாட்சியாக நின்றுகொண்டிருக்கின்றன. மொத்த வீடுகளில் இரண்டு வீடுகளில்தான் மனித நடமாட்டம். அந்தத் தெருவில் நடக்கும்போது எனக்கு வந்த Feeling... I Am the Legend – Will Smith! கொரோனா Lockdown உச்சத்தில் இருந்தபோது, தடையை மீறி நாம் மட்டும் ரோட்டில் சுற்றினால் எப்படி இருக்குமோ... அப்படி ஒரு அமைதி! ஒரு நாய் குறுக்கே வந்தால்கூட, “அப்பாடா... இன்னொரு உயிர் இருக்கிறது!” என்று கட்டிப்பிடிக்கத் தோன்றும் அளவுக்கு அமைதி! ஆனால் இன்று காலை சன் டிவியில் அதே கோவிலைக் காட்டும்போது... என்ன ஆச்சரியம்! பத்து, பதினைந்து பேர் இருந்தார்கள்! நான் போனபோது நாலு பேர்தான் — அதில் ஒருவர் பெருமாள். இங்கே பார்த்தால் நல்ல கூட்டம்! எனக்கு இரண்டு சந்தேகங்கள். ஒன்று — ஏதோ ஒரு விசேஷ நாளில் படப்பிடிப்பு நடத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால்... “நாளைக்கு சன் டிவி ‘தெய்வ தரிசனம்’ ஷூட்டிங். கேமராவில் தெரிய விருப்பமுள்ள பக்தர்கள் காலை மாஆஜராகவும்!” என்று சன் டிவிக்காரர்களே Advertisement கொடுத்து ஆள் சேர்த்திருக்க வேண்டும்! ஒருவேளை கேமரா அணைந்ததும், “சரி... ஷூட்டிங் முடிஞ்சுது!” என்று அந்தப் பதினைந்து பேரும் கிளம்பி, பட்டாசாரியார் மறுபடியும் அந்த மண்டபத்துக்குப் போய், “சரி... கொஞ்சம் ரோட்டைப் பார்ப்போம்...” என்று உட்கார்ந்திருப்பாரோ என்னவோ! இதையெல்லாம் பார்க்கும்போது நேற்று பால்காரர் நீட்டிய அந்த டொனேஷன் புத்தகம் மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது. நூற்றாண்டுகளாக நிற்கும் பழைய கோவில்கள்... பக்தர்கள் இல்லாமல், பராமரிப்பு இல்லாமல், எதிரில் இருந்த அக்ரஹாரமே சிதிலமடைந்து, “எங்களை யாராவது கொஞ்சம் பார்த்துக்கோங்கப்பா...” என்று தாக்குப்பிடிக்கத் தடுமாறிக் கொண்டிருக்கின்றன. அதே நேரத்தில் நாம் என்ன செய்கிறோம்? புது வீடு கட்டுகிற மாதிரி புதுசு புதுசாகக் கோவில் கட்டிக்கொண்டிருக்கிறோம்! பழைய வீட்டுக்கு பெயிண்ட் அடிக்க ஆள் இல்லை.ஆனால் அடுத்த Plot-ல் புதுசா வீடு கட்ட பூமி பூஜைக்கு கூட்டம்! பழைய கோவிலில் பெருமாள், “யாராவது வருவாங்களா?” என்று வாசலைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். புதிய கோவிலுக்கு Fund Collection மட்டும் Full Swing-ல் போய்க்கொண்டிருக்கிறது! என்னத்த சொல்ல... பெருமாளுக்கே Real Estate Competition வந்துடுச்சு போல! ஒண்ணும் சொல்றதுக்கில்லை! 😄
- Sep 7, 2026
ஒரு ரூபாயைத் தேடியவன்… ப்ளாட்டைத் தொலைத்தான்!” இது நடந்தது பல வருஷங்களுக்கு முன்பு. என்னோட ஃப்ரெண்ட் ஒருத்தன் என் ரூம்மேட்டாக இருந்தான். நல்லவன் தான். ஆனால் அவனுக்கும் குழப்பத்துக்கும் ஏதோ பூர்வஜென்ம பந்தம் இருந்திருக்க வேண்டும். அவன் குழப்பத்தைத் தேடிப் போக மாட்டான். குழப்பமே Google Maps போட்டுக்கொண்டு இவனைத் தேடி வரும்! ஒருமுறை கல்யாணத்துக்குப் பொண்ணு பார்க்கப் போனான். போயிட்டு வந்தவன் இரண்டு நாள் யார்கிட்டயும் பேசவில்லை. முகத்தைப் பார்த்தால், பொண்ணு பார்க்கப் போனவன் மாதிரி இல்லை; சொத்து முழுவதையும் எழுதி வைத்துவிட்டு வந்தவன் மாதிரி இருந்தான். “என்னடா ஆச்சு? பொண்ணைப் பிடிக்கலையா?”ன்னேன். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்துவிட்டு, “பொண்ணைப் பிடிக்கலைடா…” “சரி, அதுக்கென்ன இவ்வளவு சோகம்?” “அவளோட தங்கையைப் பிடிச்சிருக்கு!” எனக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், பொண்ணைப் பிடிக்கவில்லை என்பதை பெண் வீட்டிலும் சொல்லவில்லை; தன் வீட்டிலும் சொல்லவில்லை. அதிர்ஷ்டவசமாக, பெண் வீட்டிலேயே வேறு சில காரணங்களால், “இந்த மாப்பிள்ளை வேண்டாம்!” என்று சொல்லிவிட்டார்கள். அன்றைக்கு மட்டும் கடவுள் இவனுடைய application-ஐ priority-யில் process பண்ணியிருக்கிறார். தப்பித்தான்! இவனுக்கு இன்னொரு விசித்திரமான பழக்கம். தினமும் செலவழித்த ஒவ்வொரு ரூபாயையும் நோட்டுப் புத்தகத்தில் எழுதிவைப்பான். ஒருநாள் நைட் 11 மணிக்கு திடீரென்று எழுந்து லைட்டைப் போட்டான். “ஏண்டா! நடுராத்திரியில் லைட்டைப் போட்டு படுத்தற?”ன்னேன். “இன்னைக்கு காலையில ரூ.25 இருந்தது. செலவெல்லாம் எழுதிப் பார்த்தா ரூ.24க்குத்தான் கணக்கு வருது. ஒரு ரூபாய் எங்க போச்சுன்னு ரொம்ப நேரமா யோசிச்சிட்டிருந்தேன்.” “அதுக்கு இப்ப என்ன?” “இப்ப ஞாபகம் வந்துடுச்சு! காலைல மறந்துடலாம். அதான் இப்பவே எழுதணும்!” என்று நோட்டுப் புத்தகத்தை எடுத்தான். அந்த ஒரு ரூபாயைக் கண்டுபிடித்த பிறகுதான் அவனுக்கு நிம்மதியான தூக்கம். Bankல அந்த Manual Ledger இருந்த நேரத்தில Current Account Ledger Balanceஐக் கூட இப்படி tally பண்ணியிருக்க மாட்டாங்க இப்படிப்பட்ட மகான் மெட்ராஸில் ஒரு ப்ளாட் வாங்கினான். ஒரு பெரிய நிலத்தைப் பிரித்து பலர் ப்ளாட்டாக வாங்கியிருந்தார்கள். இவனும் ஒன்றை வாங்கி பல வருடங்கள் சும்மாவே வைத்திருந்தான். ஒருநாள் திடீரென்று, “வீடு கட்டப் போறேன்!” என்றான். நாங்கள் யாரும் Congrats!!!னு சொல்லலை. ஏன்னா, இவனிடம் “வீடு கட்டப் போறேன்” என்பது ஒரு final decision கிடையாது. அது ஒரு draft version. அதற்கு முன்பு ஒரு மாதத்துக்கும் மேலாக வங்கிக் கடன் கணக்கு போட்டிட்டிருந்தான். “20 வருஷம் லோன் எடுத்தா எவ்வளவு வட்டி?” “15 வருஷம் எடுத்தா?” “EMI இவ்வளவு வந்தா?” “மாசத்துக்கு இன்னும் 2,000 ரூபாய் extra கட்டினா?” “வட்டி விகிதம் 0.25% குறைந்தா?” என்று ஒரு நோட்டுப் புத்தகத்தையே காலி பண்ணி வைச்சிருந்தான். எழுதுவான். அடிப்பான். மறுபடியும் எழுதுவான். Calculator அழும் வரை கணக்கு போடுவான். ஒருநாள், “வீடு கட்டப் போறேன்!” மறுநாள், “வேண்டாம்டா… இப்ப கட்டுறது சரியில்லை.” கடைசியில் அவனுடைய அப்பா கொடுத்த பிரஷரில் லோன் வாங்கி வீட்டைக் கட்ட ஆரம்பித்தான். வீடும் கட்டி முடிந்தது. பெயிண்டிங் முடிந்தது. கதவு, ஜன்னல் எல்லாம் முடிந்தது. மின்சாரம் வந்தது. தண்ணீர் வந்தது. நாளைக்கு கிரஹப்பிரவேசம். முந்தின நாள் ஒருவர் வந்தார். வீட்டை ஒரு முறை பார்த்தார். பிறகு மிகச் சாதாரணமாக, “சார்… இந்த இடம் என்னோடது.” என்றார். என் நண்பனுக்கு முதலில் புரியவில்லை. “என்னது?” “நீங்க வாங்கின ப்ளாட் oppositeல இருக்கு. இது என்னோட ப்ளாட். இங்க எப்படி வீடு கட்டினீங்க?” அவ்வளவுதான். கிரஹப்பிரவேசத்துக்கு வைத்திருந்த பால் பொங்குவதற்கு முன்பே, இவன் BP பொங்கிவிட்டது. வீட்டில் எல்லோரும் அதிர்ச்சி. நாளைக்கு புதுமனை புகுவிழா என்று நினைத்துக் கொண்டிருந்தவர்கள், “முதல்ல இந்த மனை யாருடையது?” என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள்! எனக்கு உடனே ஞாபகம் வந்தது. ரூ.25-ல் ஒரு ரூபாய் எங்கே போனது என்று இரவு 11 மணிக்கு எழுந்து கணக்கு பார்த்த மனிதன்… பல லட்சம் ரூபாய் செலவு செய்து வீடு கட்டும்போது, ப்ளாட் இதுதானா என்று மட்டும் பார்க்கவில்லை! “இந்த இடம் என்னுடையது” என்று வந்தவர் அதே ஏரியாவைச் சேர்ந்தவர். அதாவது foundation போட்டது தெரிந்திருக்கும். தூண் எழுப்பியது தெரிந்திருக்கும். ஆனால் மனிதர் எதுவும் சொல்லவில்லை. எல்லாம் முடிந்து, மறுநாள் கிரஹப்பிரவேசம் என்றபோது வந்து, “By the way… இது என்னோட இடம்!” என்று சொல்லியிருக்கிறார். பிறகு பேச்சுவார்த்தை நடந்தது. “சரி, உங்கள் இடம் opposite-ல் இருக்கிறது. இரண்டு ப்ளாட்டையும் மாற்றிக்கொள்வோம்” என்று முடிவு செய்தார்கள். ஆனால் பத்திரச் செலவு முழுவதையும் இவனே ஏற்க வேண்டியிருந்தது. அது மட்டும் இல்லை. அந்த நபருக்கு மேலே கொஞ்சம் பணமும் கொடுக்க வேண்டியிருந்தது. “எவ்வளவுடா போச்சு?” என்று கேட்டேன். அவன் சொன்ன தொகையைக் கேட்டதும் எனக்கே தலை சுற்றியது. வீடு கட்டிய செலவில் கிட்டத்தட்ட 30% கூடுதல்! பின்னாளில்தான் இன்னொரு தகவல் தெரிந்தது. அந்த ஆள் ஒரு… ரியல் எஸ்டேட் புரோக்கர்! ரூ.25-ல் ஒரு ரூபாய் குறைந்ததற்காக, “அந்த ஒரு ரூபாய் எங்கே போச்சு?” என்று இரவு 11 மணிக்கு தூக்கத்திலிருந்து எழுந்து நோட்டுப் புத்தகத்தில் கணக்கு எழுதியவன்… வாழ்க்கையிலேயே செய்த மிகப்பெரிய செலவான வீட்டைக் கட்டும்போது, Budget சரியா என்று பார்ப்பதற்கு முன்னால்… Plot சரியா என்று பார்க்க மறந்து விட்டான். இப்போது நினைக்கும் போது என்னவொரு டென்ஷன் இருந்திருக்கும் என்பது புரிகிறது. எல்லாம் கெரகம் – அவன் நேரம் – வேறென்ன சொல்ல!!!
- Sep 7, 2026
நாராயணீய பாராயணத்திற்கு ரூ.65,000! 😍 (நான் படித்தது. ஆனாலும் வசதிக்காக “நான்” என்றே எழுதுகிறேன்!) கொரோனா காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நாராயணீயம் – லலிதா சகஸ்ரநாம பாராயண குரூப். அதை நடத்திக் கொண்டிருந்த மாமிக்கு வயது காரணமாகத் தொடர்ந்து நடத்த முடியவில்லை. ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, “இனிமே இந்த குரூப்பை நீதான் பார்த்துக்கணும். நீதான் தலைவி!” என்று பதவியை என் கையில் ஒப்படைத்தார். அவ்வளவுதான்! எனக்குள் ஒரு பெருமிதம்! ஏதோ ஒரு International Companyன் President & CEO பதவி எனக்குக் கிடைத்தது போல! வீட்டுக்குப் போய் கண்ணாடியில் என்னைப் பார்த்தால் கூட, “Madam President!” என்று எனக்கே சொல்லிக்கொள்ள வேண்டும் போல இருந்தது! குரூப்பில் மொத்தம் 60 பேர். ஆனால் அதில் சுமார் 30 பேர் தான் நம்ம Active Commandos! யார் வீட்டில் பாராயணம் என்றாலும் போதும்... அசோக் நகரா? அல்லது அம்பத்தூரா – நாங்க வரோம் தான் ஆனால் ஒரு சின்ன பிரச்சனை. இவ்வளவு தூரம் ஆட்டோ, மெட்ரோ, பஸ் என்று செலவு செய்து போகும் எங்களுக்கு சில வீடுகளில் கிடைக்கும் சம்பாவனை... 2 வெற்றிலை. 1 ரோஜா பாக்கு. 1 கதலிப்பழம். 1 பத்து ரூபாய் காயின். அவ்வளவுதான்! அந்தப் பத்து ரூபாயைப் பார்த்தால், “நீ வீட்டுக்குப் போறதுக்கு நான் பொறுப்பில்லை... என்னால் முடிஞ்சது இவ்வளவுதான்!” என்று அது என்னைப் பார்த்துச் சொல்வது போல இருக்கும்! சில வீடுகளில் அதைவிட விசேஷம். ஒரே ஒரு ஜக் காஃபியைக் கொண்டு வந்து, “எல்லாரும் காஃபி எடுத்துக்கோங்கோ...” என்று வைத்துவிட்டுப் போய்விடுவார்கள். குரூப்பில் 30 பேர். ஜக்கில் இருப்பது நாலு பேருக்கான காஃபி! அதைப் பார்த்தவுடன் பாராயணம் செய்த புண்ணியத்தோடு சேர்த்து, “ஏகம் ஸத்... காஃபி பஹுதா பிபந்தி!” (இது அவர் எழுதியது – எனக்கு அர்த்தம் தெரியாது) என்ற தத்துவத்தையும் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்! ஒரு கட்டத்தில் எனக்கே தோன்றியது... “இனிமே பாராயணத்துக்கு ரேட் பேசிடலாமா?” என்று! பிறகு மனசாட்சி குறுக்கே வந்தது. “பகவான் கைங்கர்யத்துக்கு ரேட் பேசறதா?” என்று. சரி... நான் வேண்டுமானால் புண்ணியம் வாங்கிக் கொள்ளலாம். ஆனால் என்னை நம்பி அம்பத்தூர் வரை ஆட்டோவில் வரும் மற்ற 30 பேரையும் பார்க்க வேண்டுமே! இப்படியே நாட்கள் சென்றன. முதலில், “நான் வரேன் மாமி!” “நானும் வரேன்!” “என்னையும் சேர்த்துக்கோங்கோ!” என்று போட்டி போட்டுக் கொண்டு வந்தவர்கள்... கொஞ்சம் கொஞ்சமாக, “அன்னிக்கு கொஞ்சம் வேலை இருக்கு மாமி...” என்று ஆனார்கள். பிறகு,“பார்த்து சொல்றேன்...” என்றார்கள். கடைசியில் WhatsApp-ல் message பார்த்துவிட்டு... Blue Tick மட்டும்! அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் நங்கநல்லூரில் ஒரு வீட்டிலிருந்து நாராயணீய பாராயணத்திற்கு அழைப்பு வந்தது. நாங்களும் போனோம். வீட்டுக்குள் நுழைந்தவுடனேயே... காஃபி! எல்லோருக்கும் தனித்தனியாக ஒரு தண்ணீர் பாட்டில்! எனக்கு உடனே சந்தேகம் வந்துவிட்டது. “என்னடா இது... ஆரம்பமே அமர்க்களமா இருக்கே!” பாராயணமும் பிரமாதமாக முடிந்தது. முடிந்ததும் அந்த வீட்டு மாமி என்னை மட்டும் சாமி ரூமுக்குக் கூப்பிட்டார். நானும் போனேன். அவர் ஒரு பெரிய தட்டை எடுத்தார். அதில்... ₹500 நோட்டுக் கட்டு! ₹100 நோட்டுக் கட்டு! ₹50 நோட்டுக் கட்டு! எல்லாம் புத்தம் புது நோட்டுகள்! மொத்தம்... ₹65,000! என் கண்கள் அப்படியே விரிந்துவிட்டன! வெளியில் முகம் மட்டும், “நாராயணா... நாராயணா...” என்று பக்தியாக இருந்தது. உள்ளே மனசு மட்டும் “அறுபத்தஞ்சாயிரமா?” என்று ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது! அடுத்த இரண்டு நிமிடங்களில் என் மனம் Calculator Mode-க்கு மாறிவிட்டது. 30 பேருக்குப் பிரித்தால் எவ்வளவு? தலைவிக்கு கொஞ்சம் extra இருக்குமா? மிச்சப் பணத்தில் என்ன வாங்கலாம்? புது புடவை? ஹேண்ட்பேக்? இல்லை... ரொம்ப நாளாக நினைத்த அந்தப் பொருளை வாங்கலாமா? ₹65,000 என் கைக்கு இன்னும் வரவே இல்லை. ஆனால் மனதிற்குள் அதை ₹85,000 வரை செலவு செய்துவிட்டேன்! அப்போதுதான் மாமி பேச ஆரம்பித்தார். “இந்த ₹500 கட்டையும் ₹100 கட்டையும் உங்க கையால என் பேத்தி கையில கொடுங்கோ...” நான் சிரித்தேன். “கண்டிப்பா மாமி...” “அவளுக்குக் கல்யாணம். முதல் பணம் என்னோடது. ₹60,000-ல ஆரம்பிக்கிறேன். பகவானுக்குப் பாராயணம் பண்ற நீங்க எடுத்துக் கொடுத்தா எனக்கு ரொம்பத் திருப்தியா இருக்கும்.” புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்........ என் ₹65,000 ஆசை பலூனிலிருந்து ஒரே நொடியில் ₹60,000 காற்று வெளியேறியது! மனசுக்குள், “சரி... நாராயணா... ₹60,000 போனால் போகட்டும். இன்னும் ₹5,000 இருக்கே!” என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன். மாமி அடுத்த குண்டைப் போட்டார். “இந்த ₹5,000-ஐ எடுத்துக்கோங்கோ...” என் முகத்தில் மீண்டும் 1000 watts வெளிச்சம்! அடுத்த நொடி... “உங்க குரூப்புல வந்தவாளுக்கு ஆளுக்கு ₹100 வீதம் கொடுத்துடுங்கோ!” மீண்டும்... புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்....! 30 பேருக்கு ₹100. ₹3,000 காலி! “பரவாயில்லை... இன்னும் ₹2,000 இருக்கே!” என்று என் மனசு விடாமல் போராடியது. ஆனால் அந்த ₹2,000-க்கும் விதி வேறு மாதிரி எழுதப்பட்டிருந்தது! “பக்கத்து வீட்டு மாமிக்கு ₹100...” சரி. “எதிர் வீட்டு மாமிக்கும் ₹100...” சரி... “அவாளுக்கும் கொடுங்கோ...” சரி... “இவாளுக்கும் கொடுங்கோ...” என்று என் கண் முன்னாலேயே ரூ.2000 உருகிக் கொண்டிருந்தது! கடைசியில் அந்த வீட்டு மாமியே, “எனக்கும் ஒரு ₹100 கொடுங்கோ!” என்று வாங்கிக் கொண்டார்! எல்லா கணக்கு வழக்குகளும் முடிந்து... தட்டைத் திருப்பிக் கொடுத்து... பர்ஸைத் திறந்து பார்த்தேன். ₹65,000-ல் என் கையில் மிச்சம்... ₹150! நங்கநல்லூருக்குப் போய் வந்த one way ஆட்டோச் செலவுக்குக் கூட காணுமா என்று தெரியவில்லை! அப்போதுதான் வாழ்க்கையின் மிகப்பெரிய தத்துவம் புரிந்தது. தட்டில் ₹65,000 இருப்பதைப் பார்த்தவுடன் அது நம்முடையது என்று நினைத்துவிடக் கூடாது! நமக்கு விதிக்கப்பட்டது ₹150 என்றால்... ₹65,000 தட்டையே கையில் கொடுத்தாலும்... ₹64,850 நம்மைப் பார்த்து “நாராயணா!” என்று சொல்லிவிட்டுப் போய்விடும்! ஆகவே... “என்ன எழுதியிருக்கோ... அதுதான் கிடைக்கும்!” அன்று நாராயணீயத்தில் ஒரு புதிய ஸ்லோகம் கற்றுக்கொண்டேன்: “தட்டஸ்ய தனம் தட்டே திஷ்டதி...மம தனம் நூற்றைம்பது ரூப்யகம்!” (இதுவும் அவருடைய வரிகளே) 😄 நாராயணா... நாராயணா! 🙏😂
- Sep 7, 2026
இரண்டு வியாபாரிகள் இன்று கார் ஷெட்டில் கீழே நின்று கொண்டிருந்தபோது, இரண்டு வித்தியாசமான வியாபாரிகளை ஸ்கூட்டி / ஹோண்டா ஆக்டிவாவில் பார்த்தேன். முதல் வியாபாரி – சிடுக்கு முடி! “சிக்கு முடி - சிடுக்கு முடி இருக்கா... !” என்று ஸ்பீக்கரில் அறிவிப்பு. அதோடு நிறுத்தவில்லை. 10 கிராம் ரூ.40 என்று ஆரம்பித்து, எத்தனை கிராமுக்கு எவ்வளவு ரேட் என்று விலாவாரியாகச் சொல்லிக்கொண்டே போனார். இரண்டாவது வியாபாரி – பழைய மொபைல் ஃபோன்! பழைய மொபைல் ஃபோன்களை வாங்குவதாக ஸ்பீக்கரில் அறிவித்துக்கொண்டு வந்தார். இந்த மாதிரியான தெருமுனை மொபைல் வியாபாரத்தை நான் கேள்விப்படுவது இதுதான் முதல் முறை. “Button Phone-ஓ, Touch Phone-ஓ... ஓடுதோ, ஓடாததோ... எல்லாமே நீங்கள் விரும்பும் நல்ல விலைக்கு வாங்கப்படும்!” இந்த மாதிரி வண்டியை ஓட்டிக்கொண்டு, பெட்ரோல் செலவு செய்து, ஸ்பீக்கரில் தெருவே கேட்கும்படி அலறவிட்டு வியாபாரம் செய்யும் அளவுக்கு Business நடக்கிறதா, கம்பெனிக்குக் கட்டுப்படி ஆகிறதா என்பதெல்லாம் எனக்குத் தெரியவில்லை. மொபைல் ஃபோனைப் பொறுத்தவரை, ஒரு நாள் டெஸ்ட் பண்ணுவதற்காகவாவது அவரைக் கூப்பிட்டு, வீட்டில் கிடக்கும் பழைய ஃபோனுக்கு என்ன ரேட் சொல்கிறார் என்று பார்க்கலாம். ஆனால் சிடுக்கு முடி... அதை இந்தத் தெருவில் தேடுவது சரியா என்று எனக்குத் தெரியவில்லை. ஒருவேளை அவருடைய ஸ்பீக்கர் சத்தத்தைக் கேட்ட பிறகு, தலையைப் பிய்த்துக் கொள்கிறவர்கள் அதிகமானால் அவருக்கு பிஸினெஸ் கிடைக்கலாம்
Ranked by total interactions across everything we have tracked for this account, which is a longer history than the 30-day window the rates above use. The multiple compares each post to this account's own median.
Recurring topics
The most frequent hashtags in the sampled posts. They describe what this account writes about; they are not a performance signal, and the catalog-wide breakdown on the hub shows how little hashtag count moves.
Buy or sell X accounts - escrow-protected
PlayerSells is an escrow marketplace for X accounts. Every deal is protected, with no middleman risk.
Reading these numbers
A typical post picks up 80 interactions against 274K followers, an engagement rate of 0.029%. Measured over 10 original posts, its engagement rate beats 40% of 6,874 tracked accounts of a similar size, which puts it in the middle of its size range rather than at either end. Posts are seen about 6.6K times each, and 1.20% of those impressions turn into an interaction. That is about 2.42% of the follower count, which is the gap between an audience on paper and an audience in a timeline. Posting runs at about 1.4 post a day over the last 30 days, though only 17% of days saw any activity at all. Most posts go out around 05:00 UTC, and Monday is the busiest day of the week. Of the 10 posts sampled, 10% carry an image or video and 10% link out. The account's strongest tracked post pulled 640 interactions, about 8.0x its own typical post. Recurring topics include #bihar, #chanakyaa, #india.
- What is Tamil_Typist's engagement rate on X?
- Tamil_Typist (@tamil_typist) has an engagement rate of 0.029%, based on the median interactions across 10 original posts from the last 30 days against 274,310 followers. Replies, reposts and quote-posts of other people are excluded from that sample.
- Is that a good engagement rate?
- At 0.029%, Tamil_Typist sits above the 25th percentile of the 66,258 accounts in this comparison. Those comparison accounts are all large ones, because our scanning cadence is weighted towards big accounts, so this is a ranking among peers of similar scale rather than a ranking across X.
- Does @tamil_typist have real engagement?
- Its engagement rate beats 40% of the tracked X accounts closest to it in follower count (6,874 accounts), which puts it in the middle of its size range group. Ranking inside a size band matters because engagement rate falls as accounts grow, so a raw rate would mostly re-measure the follower count. It is a starting point for a look at follower quality, not a verdict on it.
- When does @tamil_typist post?
- Most posts go out around 05:00 UTC, and Monday is its busiest day, at roughly 1.43 posts per day across the measured window.